ஷிவம் டுபேவுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்: யுவராஜ் சிங்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      விளையாட்டு
Shivam Dubey-Yuvraj Singh 2020 02 08

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்குள்ளான ஷிவம் டுபேவுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷிவம் டுபே இடம் பிடித்துள்ளார். இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இடம் பிடித்து விளையாடினார்.ஐந்தாவது போட்டியில் ஷிவம் டுபே ஓரே ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக ஷிவம் டுபேவுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,

ஷிவம் டுபேவுக்கு சிறப்பான திறமை இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் அவருக்கு நாம் இன்னும் கூடுதலாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முதுகில் ஆபரேசன் செய்தபின், வேகமாக பந்து வீசுவது கடினமானது. ஆகையால், ஹர்திக் பாண்டியா மீண்டும் பழைய நிலைக்கு எந்த வகையில் திரும்புவார் என்று எனக்குத் தெரியாது.ஷிபம் டுபேயை பொறுத்த வகையில் நாம் அவரக்கு கூடுதலாக நேரம் கொடுத்தால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்கால வீரராக அவரை நாம் பார்க்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து