மெக்சிகோ ஓபன் டென்னிஸ் : நடால் முதல் சுற்றில் வெற்றி

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      விளையாட்டு
nadal win 2020 02 26

அகாபுல் : ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபன் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் பப்லோ அண்டுஜார் - ஐ எதிர் கொண்டார்.  இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து