முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 முதல் தண்ணீர் திறப்பு: பணியை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்

வியாழக்கிழமை, 28 மே 2020      தமிழகம்
Image Unavailable

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வருகின்ற ஜுன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து இதுவரை ஜூன் 12-ம் தேதி 16 முறையும், ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாக 10 முறையும், காலதாமதமாக 60 முறையும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 17-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலமான ஜூன் 12-ம் தேதி இந்த ஆண்டு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதாலும் இந்த மாத இறுதிக்குள் கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 100.66 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 66 டி.எம்.சி. ஆகும். நீர்வரத்து 2,100 கன அடியாகவும் வந்து கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து