முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ உடையில் வந்த போதை பொருள் கும்பல் : மெக்சிகோவில் சுட்டு வீழ்த்திய வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் ராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேரை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு குழுக்களாக இணைந்து மெக்சிகோவிலும், எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் இந்த கடத்தல் குழுக்கள் போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.   

இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை தடுக்கும் விதமாக அமெரிக்க எல்லையில் மெக்சிகோ ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் சில சமயங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.  

இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்துடன் எல்லையை பகிரும் மெக்சிகோவின் தமுயுல்பாஸ் மாகாணம் நூவா லியோன் என்ற பகுதியின் எலையோரம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் அந்நாட்டி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ராணுவ உடை அணிந்து ஆயுதங்களுடன் கார்களில் வந்த போதைப்பொருள் கும்பல் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். 

போதைபொருள் கும்பலின் தாக்குதலால் சற்று நிலைகுலைந்த ராணுவ வீரர்கள் பதில் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.   மெக்சிகோ ராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

போதைப்பொருள் கும்பல் பயன்படுத்திய காரும் வீரர்களின் தாக்குதலில் தீக்கிரையானது. போதைப்பொருள் கும்பலிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து