முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொருளாதார கவுன்சிலின் சமூக உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடக்கிறது: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு 2020 ஜூலை 17 அன்று காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக சிறப்புரை ஆற்றவிருக்கிறார். இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் அரசு, தனியார் துறை, பொதுச்சமூகம் மற்றும் கல்வியாளர்களின் பிரதிநிதிகள் என சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.  மாறி வரும் சர்வதேச சூழல் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னணியில் நடைபெறும் இக்கூட்டம் பன்முகத் தன்மையினை வளர்த்தெடுக்கும் முக்கியமான சக்திகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும், வலுவான தலைமை, சிறப்பாகச் செயல்படும் சர்வதேச அமைப்புகள், விரிவடைந்த பங்கேற்பு மற்றும் உலகளாவிய மக்கள் நலனின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கான வழிகளைக் கண்டறிவதாகவும் இருக்கும்.

ஐ.நா. வின் பாதுகாப்புக் கவுன்சிலில் 2021-22 காலப்பகுதிக்கென நிரந்தரமற்ற உறுப்பினராக பெருவாரியான ஆதரவுடன் (இன்று) ஜூன்17 அன்று இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஐ.நா. சபையின் பெருவாரியான உறுப்பினர்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துவதற்கான முதல் வாய்ப்பு இதுவாகும்.  ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில் அதன் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டத்தின் பேசுபொருளும் கூட பாதுகாப்புக் கவுன்சிலின் முன்னுரிமை குறித்த இந்தியாவின் கருத்தோட்டத்தை எதிரொலிப்பதாகவே அமைந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து