முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார். இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே  தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 225 இடங்களில் 59.9 சதவீத வாக்குகளுடன் அக்கட்சி 150 இடங்களை கைப்பற்றியது. ராஜபக்சேக்கு மட்டுமே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் விருப்ப  ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது இலங்கை தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் பெறாத மகத்தான வெற்றி ஆகும். 

இந்நிலையில், இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே 4-வது முறையாக பதவியேற்றார். கொழும்பு புறநகர் கெலானியாவில் உள்ள புனித ராஜமகா விகாரியா புத்த கோயிலில் இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய முன்னிலையில்  மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் வருகிற 20-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மகிந்தா ராஜபக்சே இந்நாட்டு பிரதமராக கடந்த 2004 முதல் 2005 வரையிலும், 2018-ல் 3 மாதங்களும் இருந்துள்ளார். பின்னர், கோத்தபய ராஜபக்சே அதிபரானதும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, 2019-ல் மகிந்தா அந்த பதவியில்  நியமிக்கப்பட்டார். தற்போது 4-வது முறை பிரதமராக அவர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகிக்கிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபருக்காக அதிகாரங்களை குறைக்கும் 19-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் நீக்க கோத்தபய விரும்புகிறார்.

தற்போது, அவரது சகோதரர்  மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்கும் நிலையில், விரைவில் இலங்கை நாடாளுமன்றத்தில் 19-வது சட்ட திருத்தம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து