எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,14,520-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார துறை கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,56,313 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,633 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 5,278- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 993 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 133 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 34,32,025 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 81.49 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 71,575 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,871 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,89,677 ஆண்கள், 1,24,814 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


