எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்சவம் அடுத்த மாதம் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதைக்காண தினமும் லட்சணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.
மேலும் வீதியுலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கலைஞர்களின் கோலாட்டம், மயிலாட்டம் மற்றும் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமான சாமி வேடமணிந்து நடனம் ஆடுவார்கள்.
இந்தாண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆனால் கோவிலில் நடைபெற கூடிய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏழுமலையான் கோவில் முதன்மை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியிருப்பதாவது:-
வருடாந்திர பிரம்மோற்சவம் இந்தாண்டு தனிமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாட்களுக்கு ஏற்றார் போல் வாகன சேவையில் அலங்கரிக்கப்படும். பின்னர் ஜீயர்களின் திவ்ய பிரபந்த பாராயணம் மற்றும் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்படும்.
கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பல தேவதைகளை வரவேற்கும் விதமாக சம்பங்கி பிரகாரத்தில் அஷ்டதி பாலகர்களுக்கு வரவேற்பளித்து சாமிக்கு நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தை காணும் விதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி அனந்த பத்மநாப சாமி விரதத்தின் போது ரங்கநாயகர் வெள்ளி அண்டாவில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அதேபோல் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோவிலுக்குள் நடத்தப்படும்.
காலை சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து உற்சவங்களும், நெய்வேத்தியம் பிரம்மோற்சவத்தின் போது எவ்வாறு நடத்தப்படுமோ? அதேபோல் இந்தாண்டும் நடத்தப்படும்.
தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பிரம்மோற்சவ வாகன சேவை கோவிலுக்குள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
4 மாடவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு அலங்காரம் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


