எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமநாதபுரம் : நான் ஒரு விவசாயி. ஆனால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. நான் ஒரு விவசாயி என்பதால்தான் பல விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
ஆனால், விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது,
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தமிழகம், இந்தியா மட்டுமன்றி, உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க, முக்கிய புனிதத்தலமாக விளங்கக்கூடிய இராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் வருகை தந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் தொழில், மீன்பிடித் தொழில் ஆகிய இரண்டு தொழில்களும் பிரதான தொழில்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டு தொழில்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக தமிழக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 48.50 கோடி மதிப்பீட்டில் விவசாய பங்களிப்போடு 94 குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2020-21ஆம் ஆண்டு ரூபாய் 31 கோடி மதிப்பீட்டில் 44 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 70 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் பருவகாலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, கோடை காலத்தில் வேளாண்மைக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், நதிகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசு மூன்று ஆண்டு காலத் திட்டம் வகுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுப்பணைகள் கட்டி, மழை காலத்தில் பொழிகின்ற நீரை சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்ட மக்களின் நலன் கருதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூபாய் 345 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள், மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எந்த மாநிலத்திலும் ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற வரலாறு கிடையாது.
அந்த வரலாற்றையும் தமிழக அரசு படைத்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிப் பகுதியில் நவீன மருத்துவமனை உருவாக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளித்து நன்மை பயக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இராமேஸ்வரத்தில் பயணிகள் தங்கும் விடுதி கட்டும் பணி சுமார் ரூபாய் 30.96 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இப்பணி விரைந்து முடிக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்குண்டான வசதி உருவாக்கித் தரப்படும். மீனவர்களின் நலனுக்காக, மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை கையாள்வதற்கு இராமநாதபுரம், மூக்கையூர் கிராமத்தில் ரூபாய் 128.70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு 4.3.2019 அன்றும், குந்துக்கலில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் கட்டி முடிக்கப்பட்டு 19.9.2020 அன்றும் பயன்பாட்டிற்கு நான் துவக்கி வைத்தேன்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்க வேண்டுமென்ற மீனவர்களின் கோரிக்கை அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு படகின் விலையான ரூபாய் 80 லட்சத்தில், மத்திய அரசு 50 சதவிகிதம், மாநில அரசு 20 சதவிகிதம் என ரூபாய் 56 லட்சம் மானியமாக தரப்படுகிறது. எஞ்சிய தொகையை மீனவர்கள் தங்கள் சொந்த நிதி மற்றும் வங்கியின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 22 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூபாய் 17.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக 70 சதவிகித மானியமாக ரூபாய் 12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 232 பயனாளிகளுக்கு படகு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் முதன்முதலில் வழங்கிய அரசு தமிழக அரசுதான். இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 3,50,220 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,316.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2016-2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,40,636 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 146 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம், இராஜசிங்கமங்கலம் மற்றும் எட்டிவயல் ஆகிய இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 847 வேளாண் இயந்திரங்கள் 13 கோடியே 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக, விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின்கீழ், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதியில் 10 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கும், வனக்குடி தொழிற் பூங்கா, சக்கரக்கோட்டை தொழிற் பூங்கா அமைப்பதற்கும் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்று அம்மாவின் அரசு நீண்டகால திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படி தென்மாவட்டங்களில், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
தொழிற்சாலைக்கான நிலத்தில் 50 சதவீதம் மானியமாக கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்கு அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில் துவங்குவதற்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுக்கும்.
இதனால், தென் மாவட்டங்களில் இருக்கும் மக்கள், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் புதிய தொழில்கள் வரும்பொழுது, இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாயானது மானாமதுரை வட்டம், இடைக்காடு கிராமத்தில் வைகை நதியை கடந்து செல்கிறது. இவ்விடத்தில் 1,500 கனஅடி நீரை வைகை நதியில் திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் நிரப்பப்படும். இத்திட்டத்தின் மூலம் நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இத்திட்டத்திற்கு தோராயமாக ரூபாய் 14,000 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, இவ்வளவு அதிக செலவில் தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. இவ்வளவு செலவு செய்து, வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு தமிழக அரசுதான். பலர், விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறேன், நான் ஒரு விவசாயி. விவசாயி குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் நன்றாக உணர்ந்து, அந்த விவசாயிகளுடைய துன்பங்களை களைய வேண்டுமென்பதற்காகத்தான் எவ்வளவு செலவானாலும் அதை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த இருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
இராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்த ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால், இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
ஆரம்பத்தில், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பல நடவடிக்கைகளை எடுத்தோம். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தோம். இதன்மூலம் நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது.
அதனால்தான் இன்றைக்கு கொரோனா தொற்றுப் பரவல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இந்த நோய்த் தொற்று எவ்வாறு பரவுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொடிய நோய் இது. இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுகின்ற ஆலோசனைகளின்படி அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியதன் மூலமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றவாறு செயல்பட்டதன் விளைவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
இன்னும் குறுகிய காலத்தில், இந்த எண்ணிக்கைகளை குறைத்து, இந்நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முழுவதும் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
இந்திய அளவில், மற்ற மாநிலங்களில் இயநோய்ப் பரவல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இந்நோய்ப் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில்தான் அதிகமான எண்ணிக்கையில், அதாவது நாள் ஒன்றுக்கு 85,000 பரிசோதனைகள் எடுக்கிறோம்.
தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது,
தமிழ்நாட்டில்தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு, குறையத் தொடங்கியுள்ளது.
குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம். வேளாண் பெருமக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் 100 சதவிகித தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தொழில் புரிபவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் 100 சதவிகித தொழிலாளர்களை வைத்துப் பணிபுரிய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. அதேபோல, எந்த ஆண்டும் இல்லாத அளவில் அதிகமான நெல் விளைச்சல் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.
இதற்கு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம். வேளாண் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்த காரணத்தால் அதிக விளைச்சல் பெறப்பட்டுள்ளது.
இதற்கு வேளாண் துறை அதிகாரிகளை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தொழில் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால் அனைத்துத் துறைகளிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அதிக வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஆய்வுக் கூட்டங்களுக்கு இடையே நேற்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் ஒரு விவசாயி. ஆனால் மு.க. ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது.
நான் ஒரு விவசாயி என்பதால்தான் பல விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால், விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்தான் என்று கூறினார்.
மாநிலங்களவையில் வேளாண் மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, வேளாண் மசோதாவில் சாதகமான அம்சங்கள் இருந்ததால்தான் அதனை ஆதரித்துள்ளோம். பாலசுப்ரமணியத்தின் பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம் என்று முதல்வர் பதிலளித்தார்.
கோட்டையில் பா.ஜ.க. கொடி பறக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கூறிய கருத்துக்கு, கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என்று பதிலடி கொடுத்ததோடு, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
29 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி


