முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், ஒரு சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. 

இதற்கிடையில் அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பொதுப்பணிகளில் இருப்பவர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

அண்மையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் உமாபாரதி, தன்னைச் சார்ந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மீண்டும் நான்கு நாட்கள் கழித்து இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து