முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.

இதுவரை 2.21 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், அமெரிக்க மக்களில் பலர் கொரோனா நெருக்கடியை கையாள்வதில் டிரம்பிற்கு பதிலாக ஜோ பிடன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறப்ப்ட்டு இருப்பதாவது:-

குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில்,குளிர்காலத்தில் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும். 

பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கிச் சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும்.  தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றில் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை. 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.ஆனால், ஒவ்வொருவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதன் மூலம் 1.3 லட்சம் உயிர்களைப் பாதுகாக்கலாம் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து