உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      இந்தியா
modi-2020-11-26

Source: provided

புதுடெல்லி : உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள ராஜாதலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் ஹண்டியா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:- 

குரு நானக் ஜெயந்தி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு வாரணாசி மேம்பட்ட உள்கட்டமைப்பைப் பெற்று வருகிறது. இது வாரணாசி மற்றும் பிரயாகராஜ் இரு பகுதிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் காசி நகரை அழகுபடுத்துவதோடு அதனுடன் இணைந்த பணிகளின் பலனையும் இப்போது நாம் காணலாம். 

வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடந்துள்ளன. 

இவ்வாறு அவர் பேசினார். 

மாலையில் வாரணாசி கங்கை நதிக்கரையில் தீபங்களை ஏற்றிவைத்த பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து