தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      அரசியல்
KP-Munuswamy 2020 12 27

தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகையில் கூறியதாவது:

தேசிய கட்சிகள் இன்னும் தமிழகத்தில் வேரூன்றவில்லை. தேசிய கட்சிகள் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. தேசிய கட்சிகள் அ.தி.மு.க. உடனோ, தி.மு.க. உடனோ தான் கூட்டணி வைக்கவேண்டும். இந்த தேர்தல் அ.தி.மு.க தி.மு.க.வுக்கும் தான் நேரடி தேர்தல். மாமன் மச்சான், அண்ணன் தம்பியாக இருப்பான். ஆனால் ஏற்றுக்கொண்ட தலைமை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்றால் மாமனாக இருந்தால் என்ன மச்சானாக இருந்தால் என்ன, அண்ணனாக இருந்தால் என்ன, தேர்தலில் எதிர்த்து நிற்பான். அவன் அ.தி.மு.க. தொண்டன். எதிரியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவனும் மாமனாக, மச்சானாக இருந்தாலும் அவன் தி.மு.க.காரனாக இருந்தால் நம்மை அவன் எதிர்த்து நிற்பான்.

இந்த தேசிய கட்சிகள் எல்லாம் சிரித்துக்கொண்டு விளையாட்டு பார்க்கும். அவர்களின் சக்தி அவ்வளவுதான். நமக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். யார் வெளியே வந்தாலும் கட்சி உடையாது. அ.தி.மு.க.வில் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை. யார் (சசிகலா) வெளியே வந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெளியே வந்தால் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும். 2021ல் 2-வது முறையாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். கட்சியின் ராஜகுருவாக இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதனை நிகழ்த்தி வைப்பார். அவர்களுடன் இணைந்து நாம் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து