முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி மற்றும் மே மாதம் 24-ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு தடைவிதித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுமதி அளித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் சீனா, ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது.  இங்கிலாந்தின் லண்டன் நகரில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருந்ததால் மற்ற நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவைக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து