முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் வரி குறைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.  ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் காங்கிரசார் நடந்து சென்றும், டிராக்டர்களில் பேரணியாக சென்றும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதேபோன்று மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  இந்த விலை உயர்வுக்கு எரிபொருள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.  அதனால் வரியை குறைக்க அரசு முன் வரவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர்  சக்திகாந்த தாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து