முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி–51ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக, 19 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–51 ராக்கெட் வருகிற 28ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படும். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

இதில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா–1 என்ற செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாகும். அதனுடன், இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் தொகுப்பைச் சார்ந்த 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஷ்தவான் சாட், இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உள்பட 19 செயற்கைகோள்கள் ஏவப்படுகின்றன. இவற்றில் முதன்மை செயற்கைகோள், பூமியில் இருந்து 637 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 78-வது ராக்கெட்டாகும். அதேபோல் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39-வது ராக்கெட்டாகும். தற்போது செலுத்தப்படும் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் சேர்த்து இதுவரை 34 நாடுகளைச் சேர்ந்த 342 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளன.

தற்போது ஏவப்படுவது, பி.எஸ்.எல்.வி. டி.எல். ரகத்தில் ஏவப்படும் 3-வது ராக்கெட்டாகும். இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான முதல் வணிக ராக்கெட்டாகும். இவ்வாறு ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து