Rajnath-Singh--2021-04-29

இந்தியாவுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் உதவி செய்த சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

நாட்டில் கொரோனாவின் 2-வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.  இதனால், அந்த நாடுகளுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது.  இதற்கு ஐ.நா.சபையும் பாராட்டு தெரிவித்து இருந்தது.

நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் பாதிப்பு சரிவை நோக்கி சென்றது ஆறுதல் அளித்தது.  ஆனால், உலக அளவில் மக்கள் தொகையில் 2-வது இடத்திலுள்ள இந்தியாவில் பாதிப்பின் தீவிரம் நாள்தோறும் உச்சமடைந்து வருகிறது.  இதனால், பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. 

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்பொழுது இது புதிய உச்சம் ஆகும்.  தொடர்ந்து உலக அளவில் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்து இருந்தன. இதேபோன்று சிங்கப்பூர் அரசும் இந்தியாவுக்கு உதவ தயார் என அறிவித்து உள்ளது.  

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது, சிங்கப்பூரின் பாதுகாப்பு துறை அமைச்சர் இங் எங் ஹென் உடன் தொடர்பு கொண்டு பேசினேன்.  இதில், கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலைக்கு எதிரான போரில் வாய்ப்புகளை வலுப்படுத்துவது பற்றி இருவரும் பேசினோம்.  இந்தியாவில் தீவிரமடைந்துள்ள 2-வது அலையால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆதரவுடன் எங்களுக்கு உதவி செய்து வரும் சிங்கப்பூர் அரசின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டேன் என கூறினார். 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து