முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வின் அகங்காரமே காரணம்: சிவசேனா விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க.வின் அகங்காரம், ஆணவம்தான் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் அந்தக் கட்சி தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது. தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பா.ஜ.க. 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தோல்வி அடைவதற்கான காரணங்கள் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைவதற்கான முக்கியக் கராணங்களில் ஒன்று பா.ஜ.க.வின் அகங்காரம், ஆணவப் போக்குதான். மகராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்து இறங்கியதற்கு கூட அந்தக் கட்சியின் சகிப்பின்மைப் போக்குதான் காரணம். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சகன் புஜ்பல், மேற்கு வங்கத் தேர்தலில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், மம்தா பானர்ஜியையும் பாராட்டிப் பேசினார். ஆனால், இதைக்கூட சகிக்க முடியாத பா.ஜ.க. மாநிலத் தலைவர் சந்திகாந்த் பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார். புஜ்பல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது. மேற்குவங்கத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றே அந்தக் கட்சியின் அகங்காரம், ஆணவப்போக்குதான். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அடைந்த பா.ஜ.க.வால் மகராஷ்டிராவில் பந்தர்பூர் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட மனது வரவில்லை. பந்தர்பூர் சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் அகாதியின் வேட்பாளர் தோற்றுவிட்டார். இருப்பினும் மகாவிகாஸ்அகாதியைச் சேர்ந்த அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாழ்ததுக் கூறினோம், வெற்றியாளருக்கு வாழ்ததுக் கூறினார்கள். ஆனால், வெற்றி பெற்றவேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களை மகாவிகாஸ்த அகாதி கூட்டணியைச் சேர்ந்த யாரும் மிரட்டவில்லை. இவ்வாறு சிவேசனா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து