முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சனிக்கிழமை, 8 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் நாளை 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். 

இதையடுத்து வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே  வழங்கும் ஆணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

நாளை 10-ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், வீடு வீடாக ரேசன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

மேலும் டோக்கன் முறையாக தரப்படுகிறதா என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் சக்கரபாணி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து