முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் அணிக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 10 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டி20 கிரிக்கெட்டில் சாம்பியன்ஸ் ட்ராஃபி நடத்தப்படுவது போல கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையிலான எ.எஃப்.சி கப் தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரூப் டி போட்டிகள் மாலத்தீவுகள் நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் இந்த போட்டித்தொடருக்காக பயணத் தடைக்கு மத்தியிலும் சிறப்பு அனுமதி பெற்று சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்.சி கால்பந்து அணி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலத்தீவுகள் சென்றடைந்துள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஹோட்டல்களில் வீரர்கள் தனிமையில் தங்கவைக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுகிறார்கள். இதனிடையே கொரோனா விதிமுறைகளை மீறி மாலத்தீவின் மாலே நகரில் பெங்களூரு அணியின் வீரர்கள் சிலர் சாலைகளில் சுற்றித்திரிந்த ஃபோட்டோ பத்ரிகைகளில் வெளியானது. இதனையடுத்து பெங்களூரு FC கால்பந்துதாட்ட அணி உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என மாலத்தீவு நாட்டின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது மஹ்லுஃப் தெரிவித்துள்ளார்.

____________

பியூஷ் சாவ்லா தந்தை மறைவு

சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்பால் காலமானார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சார்பாக விளையாடி வரும் பியூஷ் சாவ்லா, தந்தை இறந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட எனது தந்தை பிரமோத் குமார் சாவ்லா, மே 10 அன்று காலமாகியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். 32 வயது பியூஷ் சாவ்லா, இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 25 டெஸ்டுகள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

___________

ஹர்மன்ப்ரீத், மந்தனா, ஷபாலிக்கு அனுமதி

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஹண்ட்ரட் (ஒரு இன்னிங்ஸ்க்கு 100 பந்துகள்) என்ற தொடரை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி இந்த வருடம் கோடைக்காலத்தில் முதல் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உள்ளிட்ட ஐந்து பேர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

ஹர்மன்ப்ரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணிக்காகவும், ஸ்மிரி மந்தனா சவுத்தன் பிரேவ் அணிக்காகவும், ஷபாலி வர்மா பர்மிங்காமல் போனிக்ஸ் அணிக்காகவும் விளையாட இருக்கிறார்கள். ஹண்ட்ரட் தொடரில் விளையாடுவதற்காக பி.சி.சி.ஐ தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. மேற்கொண்ட மூன்று பேரைத் தவிர தீப்தி ஷர்மா, ஜெர்மையா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் விளையாடுகிறார்கள்.

__________

கொரோனா - அஸ்வின் அறிவுரை

கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே வழி. அதில் சந்தேகமேயில்லை, தயவு செய்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்” என்று அஸ்வின் கூறியுள்ளார். என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார் அஸ்வின்.

அஸ்வின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி வீடு திரும்பினார். இந்நிலையில் தன் குடும்பத்தினர் கொரோனாவினால் பட்ட வேதனையை பகிர்ந்துள்ளார் அஸ்வின். கொரோனா சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து