முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் தடுமாற்றம்

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கிராஸ் ஐலட் : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

பேட்டிங் தேர்வு 

கிராஸ் ஐலட்டில் நடைபெறும் இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி 40.5 ஓவர்களில் 97 ரன்களுக்குச் சுருண்டது. தெ.ஆ. அணியின் என்கிடி 5 விக்கெட்டுகளையும் அன்ரிக் நோர்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

டி காக் அபாரம்...

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 34, குயிண்ட  டி காக் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 170 பந்துகளில் 141 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் டி காக். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 96.5 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்தது.

143 ரன்கள்...

முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் பின்தங்கிய மே.இ. தீவுகள் அணி, 2-ம் நாள் முடிவில் 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் 21, பிளாக்வுட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 143 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளதால் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது மே.இ. தீவுகள் அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து