Idhayam Matrimony

அமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக கோவிட் தடுப்பூசிகளை வாங்கவே இல்லை. இதனால், அமெரிக்க அரசிடம் தடுப்பூசிகள் லட்சக்கணக்கில் உபரியாவது நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என, பல்வேறு விளம்பரங்களையும் சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. இருந்தும் அங்கு தடுப்பூசி உபரியாவதைத் தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஜான்சன் அன்ட் ஜான்சன் தயாரித்த 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து