முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் கார் தீ வைத்து எரிப்பு

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதற்காக, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியின் காரை, மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி வைத்து தீ வைத்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. 

அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்த வின்சென்ட் ராஜா, சசிகலாவிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

தனது தார் பிளாண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி விடுமுறை என்பதால், அங்கு டாடா நெக்சான் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் உறங்கியுள்ளார். 

அதிகாலை மிகப்பெரிய சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் சிலர் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இச்சம்பவத்தில் வின்சென்ட் ராஜாவின் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து