வேறொரு பெண்ணுடன் தொடர்பு: நடிகை புகாரை தொடர்ந்து கணவர் கைது

Ambily-devi 2021 07 14

Source: provided

கொல்லம்: வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக நடிகை அளித்த புகாரை தொடர்ந்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். 

பிரபல மலையாள நடிகை அம்பிலி தேவி. சுமதி ராம் இயக்கிய விஸ்வதுளசி படத்தில் இளவயது நந்திதா தாஸாக நடித்தவர். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார், மலையாளத்தில் பல டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒளிப்பாதிவாளர் லோவல் என்பவரை திருமணம் செய்து இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் அம்பிலி தேவியும் மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரும் காதலித்து  கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. அம்பிலி தேவிக்கும் ஆதித்யன் ஜெயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன் குடும்ப வன்முறை புகார் தெரிவித்திருந்தார் அம்பிலி. தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.  இந்நிலையில், நடிகை அம்பிலி தேவி, கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா போலீஸ்  நிலையத்தில் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது புகார் கொடுத்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து