எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமிர்தசரஸ்: முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் நடந்து வரும் நிலையில், 62 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சித்து ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசில் தற்போது உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த சூழலில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். ஆனால் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் குறித்து விமர்சித்ததற்கு நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தி இருந்தனர். தற்போது அமரீந்தரும், சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, அமிர்தசரஸில் உள்ள தனது இல்லத்தில் 62 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பர்கத் சிங், சித்து ஏன் (முதல்வரிடம்) மன்னிப்பு கேட்க வேண்டும்? இது ஒரு பொது பிரச்சினை அல்ல. முதல்வர் பல பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவர்தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது; இது, காங்கிரஸ் மேலிடத்துக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


