வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரிக்கு 9-வது இடம்

Orchery-India 2021 07 23 0

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசை சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9-வது இடத்தை பிடித்தார்.

தீபிகா குமாரி... 

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான நேற்று நடைபெற்ற தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். வில்வித்தைப் போட்டிக்கான தகுதிநிலை சுற்று அதிகாலை ஐந்தரை மணிக்கு தொடங்கியது. இதில் தனிநபருக்கான மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்றார். இதில் முதல் மூன்று இடத்தை கொரிய வீராங்கனைகள் பிடித்தனர்.

663 புள்ளிகள்...

இதில் இந்தியாவின் தீபிகா குமார் 663 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்தார். முதல் இடத்தை பிடித்த தென் கொரியாவின் அன் சான் 680 புள்ளிகளை பெற்றார். கடந்த ரியோ ஒலிம்பிக்கில் தனிநபர் தகுதிப்பிரிவில் 20-வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி, இம்முறை சிறப்பாக செயல்பட்டு பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

பூடான் வீராங்கனை... 

இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 30 முறை 10 புள்ளிகள் பெற்றார். மேலும் 13 முறை துல்லியமான (Xs) இலக்கை  அம்பு தாக்கியது. கொரிய வீராங்கனை அன் சன் 680 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இது ஒலிம்பிக் போட்டியின் சாதனையாகும். 28-ந்தேதி நடைபெறும் நாக்அவுட் சுற்றில் (1/32) தீபிகா குமாரி பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொள்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து