மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக முதல்வர் பசவராஜ் திட்டவட்டம்

Basavaraj 2021 07 28 - Copy

Source: provided

பெங்களூரு : மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையை கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரை கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்த நிலையில் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து