முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் வழியில் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவோம் - பினராயி விஜயன்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான நேற்று முதல் முறையாக சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதாகவும், உயர்வு தாழ்வில்லாச் சமத்துவச் சமுதாயம் நோக்கிய நமது பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து