முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தலே நீங்காத நிலையில் சீரோ டைப் - 2 எனும் புதிய வகை டெங்கு: தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் 11 மாநிலங்களில் சீரோ டைப் - 2 என்ற புதிய வகை டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நடப்பாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உத்தர பிரதேச மாநிலம், பிரோஸாபாத் மாவட்டத்தில் இந்த சீரோடைப் - 2 என்ற தீநுண்மி மூலம் பரவத் தொடங்கியது. இந்தத் தீநுண்மியால் ஏற்படும் காய்ச்சல் அபாயகரமானதாக கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், மகராஷ்டிரம், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இந்தியாவில் நடப்பாண்டு  ஜூலை வரை 14,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் மத்தியிலிருந்து டெங்கு பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல், காய்ச்சல் உதவி முகாம்கள் நடத்துதல், போதுமான அளவில் பரிசோதனைக் கருவிகள், மருந்துகளை இருப்புவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.   காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடா்பு அறிதல், ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதிப்படுத்துதல் தொடா்பான பணிகளுக்காக குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  

ஏற்கனவே டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு விடுத்திருந்த வழிகாட்டு நெறிமுறைகளில் வீடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும். பாரசிட்டமால் மருந்து கொடுக்கலாம்; ஈரத்துணியை வைத்து உடல் வெப்பத்தை குறைக்கலாம்.  தொடர்ந்து தலைவலி, உடல்சோர்வு, வயிற்றுவலி, வாந்தி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  3 நாட்களுக்கு மேல் அபாய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்பட வேண்டும்.  உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளலாம்.  அல்லது 7 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள்வது சிக்கலாகி விடும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து