முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் கொரோனாவை தடுக்க செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 590 கோடியாம் !

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுவதும் கொரோனாவை பரவலை தடுக்க செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 590 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.20 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.77 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.34 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.44 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 590.6 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

1) சீனா - 211.9 கோடி, 2) இந்தியா - 80.6 கோடி, 3) ஐரோப்பா ஒன்றியம் -60 கோடி, 4) அமெரிக்கா - 38.6 கோடி, 5) பிரெசில் - 20.07 கோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து