ரஷ்ய தேர்தல்: புடின் கட்சி முன்னிலை

Russia-Election-2021-09-20

ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் இருக்கிறது. அரசுக்கு எதிரான பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகள், புடினின் யுனைட்டட் ரஷ்யா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறுகின்றன. 450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையான டூமாவுக்கு தேர்தல் நடந்திருக்கிறது. இதில் 14 கட்சிகள் போட்டியிட்டன. 50 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 46 சதவிகித வாக்குகளை புடின் கட்சியும் 21 சதவிகித வாக்குகளை கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றிருக்கின்றன.

மீண்டும் வெற்றி பெறுவாரா ட்ரூடோ?

கனடாவில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஏற்கெனவே மைனாரிட்டி அரசை நடத்தும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடக்கும் 2-வது நாடாளுமன்றத் தேர்தலாகும் இது.

நாடாளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் ஆயுள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் 3-வது முறையாக ட்ரூடோ பிரதமராகப் பொறுப்பேற்பார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் ஆட்சியமைக்க முடியும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தேனீக்களால் இறந்த பென்குயின்கள்

கேப் டௌன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள்.

சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குயின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவற்றின் உடலில் தேனீக்கள் கொட்டியதைத் தவிர வேறு எந்த காயமும் தென்படவில்லை. பென்குயின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கள் கொட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிம்மை திட்டினாரா டொனால்டு டிரம்ப் ?

டிரம்ப், அதிபராக இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக போக்கு இல்லை. 

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் - கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர். அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், 'அவர் ஒரு பைத்தியக்காரன்' என்று சொல்லியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடந்த 20 ஆண்டுகளாக குறிப்பாக பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, பெண்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை கோரி அந்நாட்டு பெண்கள் காபூலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், முந்தைய அரசின் மகளிர் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கு உரிமைகளை வழங்கக்கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மியான்மரில் கடும் நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் இந்திய எல்லை அருகே அமைந்த பகுதியில் நேற்று அதிகாலை 12.54 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.  

இந்நிலநடுக்கம் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சக் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. அவற்றில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையிலான க்ரூஸ் ரக ஏவுகணையும் அடங்கும். ஆக்கஸ் உடன்பாட்டின்படி அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கித் தொழில்நுட்பங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு வழங்க இருப்பது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து