முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க. நேற்று  இறுதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி துவங்கி இன்றுடன் முடிவடைகிறது. 

இத்தேர்தலில் பா.ம.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. இடப்பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ.க., இடையே தொடர்ந்து பேச்சு நடந்தது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் நேற்று அ.தி.மு.க. சார்பில் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து