முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு : நிர்மலா சீதாராமனிடம் பாராட்டு தெரிவித்த உலக வங்கி தலைவர்

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்தில் சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16 - ந் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். 

இந்தியாவில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக நிர்மலா சீதாராமனிடம் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்தார். தடுப்பூசி உற்பத்தியிலும், வினியோகத்திலும் இந்தியாவின் சர்வதேச பங்களிப்புக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா சமீபத்தில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து