முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய வீரர்கள் போர் பயிற்சி

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் தவாங் செக்டாரில் குவிந்துள்ள இந்திய ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவப் பயிற்சி, தியானம், கடுமையான உடற்பயிற்சி என வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், எல்லைப் பகுதியில் எதிரிகளை வீழ்த்தும் திறனை நிரூபிக்கும் வகையில் ராணுவ டாங்குகளைக் கொண்டு ட்ரில் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா அத்துமீறி ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்களை அமைத்து வருகிறது. இதற்கு நீண்ட காலமாகவே இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் எல்லையில் திடீரென இந்தியா போர் விமானங்கள், பீரங்கிகள், டாங்குகள், படை வீரர்களைக் குவித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

முன்னதாக ராணுவத் தளபதி பிபின் ராவத், இந்தியா எல்லையில் எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தின் ருபா பகுதியில், கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே ஆய்வு செய்தார். இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தி வீரர்கள் தீவிர போர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து