முக்கிய செய்திகள்

தைவானுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆதரவு

Joe-Biden 2021 10 23

Source: provided

தைவானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோ பைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது, “ நாங்கள் இதில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.

தைவான் -சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தீவிரமாக இருக்கிறார். சீனா அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது என்று கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் 

_______________

ஆஸி.யில் 9 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வாபஸ்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. இருப்பினும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இடையில் அது விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தொற்று மீண்டும் அதிகரித்ததால் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு 9 மாதங்களாக பொது முடக்கம் நீடித்து வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாததால், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கடுப்பான அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து 262 நாட்களுக்கு பிறகு பொது முடக்கத்தை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

______________

ஆளில்லா விமான தாக்குதல்: அல் கொய்தா தலைவர் பலி

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்  கைப்பற்ற சிரிய அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.  இந்நிலையில் சிரியாவில் அமெரிக்கவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. 

இஸ்லாமிய அரசு குழுவுடன் போராடும் அமெரிக்க தலைமையிலான கூட்டணியால் பயன்படுத்தப்பட்ட தெற்கு சிரியாவில் உள்ள தளம் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்தது.  இதுதொடர்பாக மத்திய செய்தித் தொடர்பாளர் இராணுவ மேஜர் ஜான் ரிக்ஸ்பீ வெளியிட்ட அறிக்கையில், ‘வடமேற்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அல்-கொய்தாவின் மூத்த தலைவர் அப்துல் ஹமீத் அல்-மாதர் கொல்லப்பட்டார்’ என்று அதில் தெரிவித்தார். 

__________

வாடிக்கையாளர்களை கவரும் ஸ்குவிட் கேம் கபே

இந்தோனேசியாவில் பிரபல ஸ்குவிட் கேம் வெப் சீரிஸின் தீம் கொண்ட கபே வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான வெப்சீரிஸ் ஸ்குவிட் கேம். பெரும் பணத்தை வெல்லும்  திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு கபே ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி தங்களுடைய கபேயின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. நியான் விளக்குகள் கொண்ட அறையில், அச்சுறுத்தும் முகமூடி அணிந்த பாதுகாவலர்கள், பொம்மை துப்பாக்கிகளைப் பிடித்து, அறைக்குள் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் கட்டளைகளின் ஒலியில் உறைந்து, விளையாட்டில் முழுமையாக மூழ்கி, ஸ்குவிட் கேம் சீரிஸை அனுபவிக்கும் வகையில் இந்த கபே அமைந்துள்ளது.

_____________

இளஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்த மீட்பர் ஏசு சிலை

மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரேசிலின் மீட்பர் ஏசு சிலை பிங்க் நிறத்தில் மிளிர்ந்தது. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே மம்மோகிராம் சோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம், பிரேசிலில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 95 சதவீத பெண்கள் குணமடைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவதால் ரியோ டி ஜெனிரோவில் உள்ள 125 அடி உயர் மீட்பர் ஏசு சிலை பிங்க் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து