முக்கிய செய்திகள்

ஆர்யன்கான் வழக்கின் சாட்சி பிறழ் சாட்சி மாறி விட்டார் : போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      இந்தியா
Aryan-Khan 2021 10 25

Source: provided

மும்பை : ஆர்யன்கான் வழக்கின் சாட்சி பிறழ் சாட்சி மாறியதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் என்பவர் பிறழ் சாட்சியாக மாறி விட்டார் என்று போதைபொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளது.

கைதான ஆரியன்கானுடன் செல்ஃபி எடுத்து வைரலான தனியார் டிடெக்டிவ் கே.பி. கோசவி என்பவரின் உதவியாளர் பிரபாகர் சைல், கோசவி சாம் டிசோசா என்பவரும் 18 கோடி ரூபாய் லஞ்சம் வழங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்ததைத் தான் கேட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்படுவதாகவும் கூறியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

கோசவி மற்றும் டிசோசா இடையே அந்த செல்பேசி உரையாடல் நடந்தபோது தாமும் அப்பொழுது காரில் இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். பிரபாகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு எதிராக நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ மற்றும் சமீர் வான்கடே தரப்புகளால் தனித்தனியாக எதிர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். தம் மீதான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் வான்கடே நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து