முக்கிய செய்திகள்

மீண்டும் சூர்யா-பாலா கூட்டணி

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Surya-Bala 2021 10 31

Source: provided

நடிகர் சிவகுமாரின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாடத்தில் இயக்குனர் பாலா கலந்துக்கொண்டார். அப்போது சிவகுமார், பாலாவுடன் சேர்ந்து சூர்யா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த படத்தை தனது ட்டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் சூரியா பாலா கூட்டணி இணைய உள்ளது உறுதியாகியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து