முக்கிய செய்திகள்

தேசியத்தலைவர் பாடல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
MM-Babu 2021 10 31

Source: provided

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் தேசியத்தலைவர். எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை ஊமைவிழிகள் அரவிந்த்ராஜ் இயக்கி வருகிறார்.

தேவர் குரு பூஜை தினத்தன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இளையராஜா இசையில் தேவரய்யா என்ற பாடலை சினேகன் எழுதியுள்ளார். தேசியதலைவர் திரைப்படத்தில் முத்துரமலிங்கத் தேவராக ஜே.எம்.பஷீர் நடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து