முக்கிய செய்திகள்

ஒரே கல்லில் ஐந்து மாங்காய் - இயக்குநர் ருஷிகா

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Director-Rushika 2021 11 22

Source: provided

அறிமுக நாயகன் ராம் நடிப்பில் டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இக்ஷு என்ற படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைக்க, நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. சென்னை மழையின்போது உயிருக்கு போராடிய ஒருவரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரியுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து படத்தின் டீசரை வெளியிட்டனர். விழாவில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசுகையில், காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிட வேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள் என்றார். அடுத்து பேசிய படத்தின் இயக்குநர் ருஷிகா, உண்மை சம்பவத்தை மையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். ஒரே கல்லில் ஐந்து மாங்காய் கிடைத்த மாதிரி ஐந்து மொழிகளில் படத்தை இயக்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து