Idhayam Matrimony

புதிய ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : கொரோனா வைரஸின் உருமாற்றமான ஓமிக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாலர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநிலஅரசுகள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்டபகுதிகளில் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கவலைதரும் உருமாற்ற கொரோனா வைரஸான ஓமிக்ரான் பாதிப்புள்ள நாடுகள் குறித்த பட்டியலை ஏற்கெனவே மத்திய அரசு அடையாளம் கண்டு அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கூடுதல் விழிப்புடன், தடுப்பு நடவடிக்கைகளுடன் கண்காணிக்க வேண்டும்.

இந்த புதிய உருமாற்ற வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது. போட்ஸ்வானா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா தவிர்த்து, பிரி்ட்டன், ஆஸ்திரேலியா, செக் குடியரசு, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் உருமாற்ற வைரஸ் பரவி விட்டது.

ஆதலால், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து கண்காணிப்பை வேகப்படுத்த வேண்டும், அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும். சர்வதேச பயணிகளிடம் இருந்து பெறப்படும் மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக உரிய அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒமிக்ரான் வைரஸ் தென்பட்டுள்ள நிலையில், தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை குறைத்துள்ள மாநிலங்கள் அதிகப்படுத்த வேண்டும்

சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அளவு குறைந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனை அளவு குறையும்போது, நோயின் பரவல், தீவிரத்தன்மையை கண்டறிவது கடினம். ஆதலால், பரிசோதனைக்கான கட்டமைப்பு வசதிகளை மாநிலங்கள் தயார் செய்து மேம்படுத்தி, மத்திய அரசின் பரிசோதனை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா ஹாட் ஸ்பாட் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணி்க்க வேண்டும். ஹாட் ஸ்பாட்களில் கொரோனா பரிசோதனை மேம்படுத்துதல், உருவாக்குதல், மாதிரிகளை எடுத்து விரைவாக மரபணு பிரசோதனைக்கு அனுப்புதலை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா பாஸிட்டிவ் விகிதத்தை மாநில அரசுகள் 5 சதவீதத்துக்கு கீழாக வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து