எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பி.எம். கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.,
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (01-12-2021) ரெனால்ட் நிசான் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 2 எண்ணிக்கையில் (1 கிலோ லிட்டர்) ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலனை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது., தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் கொரோனா பேரிடரில் முன்வந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான உதவிகளை செய்ய உள்ளனர். ஏற்கனவே ரூ.1 கோடி ரூபாயை தமிழக முதலவரிடம் கொரோனா பேரிடர் நிதியாக வழங்கியிருக்கின்றனர்.
மீதமுள்ள ரூ.4 கோடி ரூபாயில் அண்ணாநகர், கலைஞர் நகர், தண்டையார் பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் தயாரிக்கும் பணிகளுக்கு செலவிட இருக்கின்றனர். இன்று (நேற்று) அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 1 கி.லோ லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் பணிகள் முடிவுற்று 2 எண்ணிக்கையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 100 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க முடியும். மற்ற மாவட்டங்களில் அந்தப் பணிகள் முடிவுற்றப் பிறகு அவைகள் திறந்து வைக்கப்படும்.
இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்பு ஆக்ஸிஜன் உற்பத்தி என்பது 270 கிலோ லிட்டர் என்கிற அளவில் இருந்தது. மே-7க்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு Liquid Oxygen Generator Plant என்கிற வகையில் 744.67 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எம். கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பின்கீழ் 77 பி.எஸ்.ஏ., ஆலைகள் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தலையேற்று தனியார் மருத்துவமனைகளில் 61 பி.எஸ்.ஏ., ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரயில்வே வாரிய மருத்துவமனைகளில் 4 பி.எஸ்.ஏ., ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. என்.எல்.சி. மருத்துவமனைகளில் 10 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டு, ஆக்ஸிஜன் வச தி என்பது மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 11,651 என்ற அளவிலும் பி-டைப் 12,457, டி-டைப் 9,450 என்பது கையிருப்பில் உள்ளது. ஆக்ஸிஜன் வசதியை பொறுத்த அளவில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில


