முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை : உலக சுகாதார அமைப்பு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : உருமாற்றமடைந்த  ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பால் இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 375 பேர் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒமைக்ரான் வைரஸை நாம் எதிர்கொள்ள தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் அதே நேரம் பயப்படாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் இந்த உருமாறிய வைரஸ் குறித்து தற்போது உறுதியாக கணித்து சொல்ல முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும் பலி இதுவரை இல்லை என்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!