முக்கிய செய்திகள்

444 கிறிஸ்துமஸ் மரங்களை ஒரே இடத்தில் வைத்த ஜெர்மன் தம்பதி

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      உலகம்
Germany 2021 12 07

Source: provided

ரோம் : ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் அமைப்பதில் தம்பதி ஒருவர் சாதனை படைத்துள்ளனர். ஒரே இடத்தில் 444 கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளன. அங்குள்ள தேவாலயம் அருகே 24 மீட்டர் உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டது. அதில் 80 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகளும், 800 பலூன்களும் பறக்க விடப்பட்டுள்ளன. இதனோடு இணைந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட தேவாலயம் மிலன் நகரையே வண்ணமயமாக்கின.    

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் அமைப்பதில் தம்பதி ஒருவர் சாதனை படைத்துள்ளனர். ஒரே இடத்தில் 444 கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 444 மரங்களும் வெவ்வேறு வகையை சார்ந்தவை என்பதே இதன் சிறப்பம்சமாகும். வீடு முழுவதும்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.      

அமெரிக்காவில்  உள்ள மைனே மாகாணத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பனிச்சறுக்கு விளையாடினர். அங்குள்ள கேளிக்கை பூங்காவில் கூடிய அவர்கள் பனிச்சறுக்கு மட்டுமின்றி அனைத்து விளையாட்டு உபகரணங்களிலும் விளையாடி மகிழ்ந்தனர். இதன் மூலம் திரட்டபட்ட நிதியை கிறிஸ்துமஸ் அன்று ஏழைகளுக்கு உதவ பயன்படுத்த உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து