எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் தேசிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கி வைத்தார். கோவிஷீல்டு, கோவேக் சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்ததாக பிப்ரவரி 2-ம் தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
மார்ச் 1-ம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணைய நோயுடன் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பின்னர் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பூசி நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. முன் எச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. கடந்த 10-ம் தேதியில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 5 மாநில சட்டசபை தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள், இணை நோய்களுடன் இருக்கும் 60 வயது முதியவர்கள் ஆகியோருக்கு முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நேற்று முன்தினத்துடன் ஒரு ஆண்டு முடிந்துள்ளது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 93 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியையும், 69.8 சத வீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர். 43.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன் எச்சரிக்கை (பூஸ்டர்) தவணை செலுத்திக் கொண்டனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 3.38 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்ட 13 தினங்களில் 45 சதவீத பேருக்கு முதல் தவணை கோவேக்சின் செலுத்தப்பட்டு உள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மாத இறுதியில் முடிவடையும். மொத்தம் 7.4 கோடி சிறுவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இதன் 2-வது தவணை தடுப்பூசி இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என்று கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.,
ஜனவரி இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 7.4 கோடி சிறுவர்களுக்கு முதல் டோஸ் செலுத்த இலக்கு வைத்துள்ளோம். பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். பிப்ரவரி இறுதிக்குள் அதை முடிக்க திட்டமிட்டுள்ளோம். 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும். இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய குழந்தை மருத்துவ அகடாமி முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, ‘குழந்தைகளுக்கான தடுப்பூசி வரம்பை உயர்த்துவது வரவேற்கத்தக்கதாகும். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


