எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில், பிசிசிஐ அவரை ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டன்சியில் இருந்தும் நீக்கியது. என்றாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார் என்று பலர் எதிர்பார்த்தபோது சில தினங்கள் முன் அதிலிருந்தும் விலகினார். விராட் கோலி இந்த முடிவு எடுப்பதற்கு முன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன்.
இது தொடர்பாக அதுல் வாசன் கூறுகையில், "ஆஸ்திரேலியத் தொடருக்கு இடையே, டோனி ஓய்வு முடிவை அறிவித்தபோது எனக்கு அது அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால், விராட் கோலியின் முடிவு எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக கோலி மீது அழுத்தம் இருந்தது என்று நினைக்கிறேன். அவர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. அணியின் தோல்விக்கு அவர் மற்ற வீரர்களைச் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கு இதற்கு முன்பு அவரிடம் கிடையாது என்றார்.
ரோகித் - அஸ்வினுக்கு வெங்சர்க்கார் ஆதரவு
இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., டிராவிட் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது இருந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தேன். எல்லோரும் டோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தனர். குறுகிய காலத்துக்காக நாங்கள் கும்ப்ளேவை தேர்வு செய்தோம். அவரும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். அதே மாதிரி தற்போது ரோகித் சர்மா அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒரு வரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம். இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு எதிரொலி: ஆஸி.-நியூசி. தொடர் ஒத்திவைப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
முதல் போட்டி 30-ம் தேதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ந் தேதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ந் தேதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ந் தேதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை நேற்று தெரிவித்தன. இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்டேஜ் லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ள மகேந்திர சிங் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு கிரிக்கெட் விளையாட்டை தாண்டி மிகவும் பிடித்த விஷயம் என்றால் அது வாகனங்கள்தான். அவரது ராஞ்சி பண்ணை வீட்டில் அமைந்துள்ள கராஜில் பழங்கால விண்டேஜ் கார்கள் தொடங்கி பிராண்ட் நியூ கார்கள், பைக்குகள் என ரகம் ரகமாக வாகனங்கள் அலங்கரித்து நிற்கின்றன.
அதில் புது வரவாக இணைக்கிறது விண்டேஜ் லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன் கார். இந்த கார் கடந்த 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் டோனி வாங்கியுள்ளார். 1971 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வெளியான லேண்ட் ரோவர் கார்களில் இந்த 3 ஸ்டேஷன் வேகன் கார் மிகவும் பிரபலம் என சொல்லப்பட்டுள்ளது. ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா பிக்-அப் டிரக், போர்ஸ் பாக்ஸர், ஃபெராரி 500 ஜிடிஓ, ஆடி க்யூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ், கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் மற்றும் நிசான் ஜோங்கா கார்களை டோனி தற்போது வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த டோனி
கடந்த 2019-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 193 ரன்கள் எடுத்திருந்தார் டோனி. அதனால் அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அப்போது டோனியின் வயது 37 வயது 195 நாட்கள். அதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மூத்த வயது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சிட்னியில் 51 ரன்கள், அடிலெய்டில் 55* ரன்கள் மற்றும் மெல்பேர்னில் 87* ரன்கள் எடுத்தார் டோனி. அதன் மூலம் இந்தியா தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்றது. டோனி அவுட்டான முதல் போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியது. அந்த தொடருக்கு பின்னர் டோனி 13 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் விளையாடி இருந்தார். அதில் நான்கு போட்டிகளில் நாட் அவுட். நியூசிலாந்து அணிக்கு எதிரான 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதுவே சர்வதேச கிரிக்கெட்டில் அவரது கடைசி போட்டியாக அமைந்தது.
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த அஸ்வின் !
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படுகிறார்கள்.
பார்ல் பகுதியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல்முறையாக டாஸில் தோற்றுள்ளது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகியுள்ளார். 4-ம் நிலை வீரராக ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என கேப்டன் ராகுல் தெரிவித்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


