முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம் மற்றும் அன்னதான கூடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.  

தமிழகத்தின் முதன்மைத் திருக்கோயில் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரியும் பக்தர்களின் அடிப்படை வசதியினை முழுமையாக பூர்த்தி செய்யும் பொருட்டு பழனி, பாலசமுத்திரம் கிராமம் அருகில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்டி அதிலிருந்து மலைக்கோயில், தங்கும் விடுதிகள் மற்றும் சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றுக்கு 2.31 MLD  தண்ணீர் வழங்கும் வகையில் 22 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  

திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகைபுரியும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மின்கல மகிழுந்து (Battery Car) பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து கம்பிவட ஊர்தி மேல்நிலையத்திலிருந்து மலைக்கோயில் வெளிப்பிரகாரத்திற்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக 13 நபர்கள் செல்லும் வகையில் 23 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி (Lift) உபயதாரர் மூலம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மணி ஓசை எழுப்பும் வகையில் புதியதாக நாதமணி மண்டபம் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  

மேலும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்முழுவதும் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் சுமார் 5,000 பக்தர்கள் உணவருந்தி வருகிறார்கள். இதன் உபகோயிலான அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி அன்னதானத்திட்டத்தில் உணவருந்த வரும் பக்தர்கள் வசதிக்காக 58 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 108 இருக்கைகளுடன் கூடிய புதிய அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,  காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் அர. சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்  ப. வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முனைவர் ச. விசாகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து