முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா, கர்நாடகாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 46,369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலையால் தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி நிலவரப்படி 6,358 ஆக இருந்த பாதிப்பு கடுமையாக உயர்ந்து 7-ந்தேதி 1 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து அதிவேகத்தில் பரவிய 3-வது அலையால் தினசரி பாதிப்பு 12-ந்தேதி 2 லட்சத்தையும், நேற்று முன்தினம் 3 லட்சத்தையும் தாண்டியது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி உள்ளது.

நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் 19.35 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 16.41 சதவீதத்தில் இருந்து 17.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதமும் 16.06-ல் இருந்து 16.56 சதவீதம் ஆக அதிகரித்தது.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக கர்நாடகாவில் 47,754 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 40,499 ஆக இருந்த நிலையில், பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 30,540 பேர் அடங்குவர். கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 46,369 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 40 சதவீதத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்பட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் புதிதாக 45,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 5,208 பேர் அடங்குவர்.

தமிழ்நாட்டில் 28,561, குஜராத்தில் 24,485, உத்தரபிரதேசத்தில் 18,429, ராஜஸ்தானில் 14,079, ஆந்திராவில் 12,615, டெல்லியில் 12,306, மேற்குவங்கத்தில் 10,959, ஒடிசாவில் 10,368 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பாதிப்பால் மேலும் 703 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 309 உள்பட 341 பேர் அடங்குவர். இதுதவிர டெல்லியில் 43, தமிழ்நாட்டில் 39, மகாராஷ்டிராவில் 37, மேற்கு வங்கத்தில் 37, பஞ்சாபில் 36, கர்நாடகாவில் 29 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,88,396 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து