முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் சிறைச்சாலை மீது சவுதி குண்டுவீச்சு: 100 கைதிகள் பலி

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபி விமான நிலையம் அருகே சில தினங்களுக்கு முன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சவுதி படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஏமன் நாட்டிலுள்ள சாதா மாகாணம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள சிறை மீது சவுதி கூட்டுப் படையினர் கடந்த வியாழன் நள்ளிரவு விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள சிறையில் இருந்த கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இது தொடர்பாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், மீட்பு படையினர் சிறைக் கட்டிடங்களில் இருந்து சடலங்களை இழுத்து வந்து குவியலாக குவிக்கும் கொடூரமான காட்சி இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஏமன் செஞ்சிலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் பஷீர் உமர் கூறுகையில், 

சிறை தாக்குதலில் காயமடைந்த 200 பேர் சாதாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து