முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் அமைந்துள்ளது. கமலா குடியிருப்பு என அழைக்கப்படும் இந்தக் கட்டிடத்தின் 18-வது தளத்தில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

18- வது மாடியில் பற்றிய தீ மளமளவென அந்த தளம் முழுக்க பரவியது. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மும்பை முழுவதும் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீ விபத்தால் கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தோர் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து