முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரின் புத்துணர்வு பயிற்சிக்கு ரூ. 10 கோடியில் புதிய திட்டம் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Silenthra-Babu 2022-05-17

Source: provided

சென்னை : போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

சென்னை எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் முதல் மாடியில் புதிதாக சுய சேவை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அங்காடி சுயசேவை பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்  டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-

காவலர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த புதிய அங்காடி போலீசாரின் குடும்பத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும். காவலர்களின் வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். காவலர்கள் பலர் மன அழுத்தத்துடனேயே பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆண்டுக்கு 250 பேர் முதல் 300 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இவர்களில் தற்போது ரம்மி விளையாட்டு போன்றவற்றில் காவலர்கள் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம்.

காவல் பணி ஆபத்தான பணியாகும். பணி நேரத்தில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பணியின் போது நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றியும் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.  இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து